Ad

புதன், 27 ஜனவரி, 2021

கொரோனா: உலகின் 4வது பணக்காரரான அம்பானி, போண்டியான சாமானியன் - அதிர்ச்சி அறிக்கை (வீடியோ)

சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள டாவோஸ் நகரில் ஆண்டுதோறும் உலகப் பொருளாதார அமைப்பின் மாநாடு நடைபெறும். பல நாடுகளின் தலைவர்கள் கூடி, முக்கியமான பொருளாதார முடிவுகளை எடுப்பார்கள். இந்த மாநாட்டை ஒட்டி, ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும். உலகெங்கும் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்த அறிக்கை இது. கொரோனா சமத்துவமாக எல்லோரையும் பாதித்தது என நாம் நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், 'இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு, கொரோனா காலத்தில் இன்னும் மோசமாகிவிட்டது' என்கிறது, இப்போது வெளியாகியுள்ள ஆக்ஸ்ஃபாம் அறிக்கை. கொரோனாவும் ஊரடங்கும் இரட்டை இடிகளாக எளிய மக்களை வதைத்த நாட்களில், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகள் அகதிகள் போல நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினார்கள். பலர் இறந்தே போனார்கள். 'எத்தனை பேர் இறந்தார்கள் என்ற புள்ளிவிவரம் இல்லை' என அரசு சொன்னது. அதே காலகட்டத்தில் உலகின் நான்காவது பெரிய பணக்காரராக ஆனார் முகேஷ் அம்பானி.

கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்துக் கிடந்த காலகட்டத்தில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களான கதையை விவரிக்கிறது இந்த வீடியோ.

வீடியோவை காண க்ளிக் செய்க....



source https://www.vikatan.com/news/general-news/during-corona-lockdown-public-suffered-ambani-earns-more-shocking-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக