Ad

திங்கள், 21 டிசம்பர், 2020

`பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா; ஆய்வுக்கு அனுப்பட்ட சளி மாதிரி!’ - ராதாகிருஷ்ணன்

இங்கிலாந்து நாட்டில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இங்கிலாந்து அரசு, கிறிஸ்துமஸை ஒட்டி அறிவித்திருக்கும் கொரோனா தளர்வுகளை நிறுத்திவைத்து, மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. உலகின் பல நாடுகள், இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்திருக்கின்றன. இந்தியாவும் நேற்று முதல் பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களை வரும் 31-ம் தேதி இரவு வரை தற்காலிகமாக தடை செய்திருக்கிறது.

Also Read: `புதிய வகை கொரோனா வைரஸ்; பிரிட்டனிலிருந்து விமானங்கள் இந்தியா வர தடை!’ - மத்திய அரசு

corona

இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை திரும்பிய நபருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அந்த நபர் தற்போது கிங் மருத்துவ மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன், ``பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதால் தமிழக மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பாதிப்பு கண்டறியப்பட்டவரின் சளி மாதிரிகள் புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்த பின்னரே அது வீரியமிக்க வைரஸா அல்லது வீரியம் குறைந்த வைரஸா என்பது தெரியவரும்” என்றார்.

Also Read: பிரிட்டனில் பரவும் புதிய கொரோனா வைரஸ்... உலகம் அச்சம் கொள்ள காரணம் என்ன?



source https://www.vikatan.com/government-and-politics/healthy/man-who-returned-from-britain-test-corona-positive

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக