Ad

செவ்வாய், 1 டிசம்பர், 2020

'மக்களுக்கு உதவுவதே மருத்துவம்!' | மீனாட்சி நிகர்நிலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

சென்னை, மீனாட்சி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. மீனாட்சி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் A.N. ராதாகிருஷ்ணன் சார்பாக, ரெக்டார் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியில் தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் கோமதி ராதாகிருஷ்ணன், துணை வேந்தர் R.S. நீலகண்டன் மற்றும் இணை வேந்தர் S.P. சிவபாதசுந்தரம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மக்களுக்கு உதவும் சேவையே மருத்துவம்!

பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக பிரபல ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் C.M.K. ரெட்டி கலந்துகொண்டு பேருரையாற்றினார். "மாணவர்களுக்கு போட்டி மனப்பான்மையைத் தவிர்த்து அன்பை போதிப்பதே உண்மையான கல்வி என்பது என் கருத்து. ஒவ்வொரு மாணவரும் தனித்துவம் கொண்டவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் என்பதை உணர்ந்து கற்பித்தால் ஆக்கப்பூர்வமான புரட்சியை சமூகத்தில் உருவாக்கிட முடியும். கல்வி மூலம் புதுமையைப் போற்றும் கலாச்சாரத்தை மாணவர்களிடம் எடுத்துரைத்தல் வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் சரியான நவீன மருத்துவ யுத்திகளைப் பயன்படுத்தி நம் மாணவர்கள் சமூகத்திற்கு ஆற்றிவரும் சேவை பாராட்டுதற்குரியது." என்றார் C.M.K. ரெட்டி.

"மருத்துவத்துறை என்பது பிறருக்கு உதவும் புனிதமான சேவை, அதை வியாபார ரீதியாக அணுகக்கூடாது என்பதை உணர்த்த வேண்டிய தருணம் இது. மருத்துவ மாணவர்கள், கருணை, சமூக விழிப்புணர்வு, நேர்மறை சிந்தனை போன்ற குணநலன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்." என்றும் கேட்டுக்கொண்டார்.

பல்கலைக்கழகத்தின் ரெக்டார் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், தமது வரவேற்புரையில், "பொது மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், பொறியியல் மற்றும் இன்ன பிற கல்லூரிகளைக் கொண்ட மீனாட்சி நிகர்நிலைப் பல்கலைக்கழகம், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு துவங்கப்பட்ட கல்வி நிறுவனமாகும். அதை இன்றுவரை கடைப்பிடித்து வருகிறோம்." எனத் தெரிவித்தார். மேலும் மீனாட்சி நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தொழில்முறை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பாடத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கிவருவது குறித்து எடுத்துரைத்தார்.

காணொளி மூலம் பட்டமளிப்பு...

துணை வேந்தர் R.S. நீலகண்டன் 2019-2020-ம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் ஆற்றிய சாதனைகளை விரிவாகப் பட்டியலிட்டார்.

குறிப்பாக கொரோனா காலத்தில், பல்கலை நிர்வாகம், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் பொதுமக்களுக்கு ஆற்றிய சேவையினை விரிவாக எடுத்துக் கூறினார். பட்டமளிப்பு விழாவில் 35 நபர்களுக்கு முனைவர் (Ph.D) பட்டமும், 63 மாணவர்களுக்கு பதக்கங்களுடன் பட்டமும் நேரடியாக வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 975 மாணவர்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்கள் காணொளி மூலம் வழங்கப்பட்டன.



source https://www.vikatan.com/news/miscellaneous/maher-14th-convocation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக