நெருங்கும் புரெவி புயல்!
நிவர் புயலைத் தொடர்ந்து வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இது, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் நேற்று இரவு புயலாக வலுப்பெற்று இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. புரெவி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் பாம்பனுக்கு 470 கி.மீ தொலைவிலும், குமரிக்கு 650 கி.மீ தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 240 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் திருகோணமலையில் இன்று கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், புயல் கரையைக் கடக்கும் போது 75- 85 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரித்துள்ளது. இது நாளை மறுதினம், அதாவது டிசம்பம் மாதம் 4-ம் தேது கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி - பாம்பன் இடையே கரையை கடக்கும் போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புரெவி புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4,300 நாட்டுப்படகுகள், 423 விசைப்படகுகள் மற்றும் 8 கட்டுமரங்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 7 ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
source https://www.vikatan.com/news/general-news/02-12-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக