Ad

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

எஸ்.வி.சேகர் vs எடப்பாடி பழனிசாமி... முதல்வரின் பதில் பற்றி உங்கள் கருத்து? #VikatanPoll

"புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க-வில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர், எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அமைச்சர் ஜெயக்குமார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று திண்டுக்கல்லில் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் குறித்து பதிலளித்துப் பேசினார். அதில், "எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார். வழக்கு வந்தால் போய் ஒளிந்துகொள்வார். அவருக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை." என்று தெரிவித்துள்ளார்.

இது தற்போது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. வழக்கிலிருந்து எஸ்.வி.சேகர் ஓடி ஒளிகிறார் என்பது முதல்வருக்குத் தெரிகிறது என்றால் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை ஒரு சாரர் முன்வைக்கின்றனர்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/controversy/vikatan-poll-regarding-eps-and-sveshekher-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக