Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

ஈரோடு: `அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; நிரம்பி வழியும் படுக்கைகள்!’ - என்ன காரணம்?

தாய்லாந்து நாட்டவரின் வருகை, ஈரோட்டிற்கு லாக்டெளனை அமல்படுத்தச் சொன்ன மத்திய அரசின் தனி அறிவிப்பு என கொரோனா சூழலில் பல பரபரப்புகளைச் சந்தித்த மாவட்டம் ஈரோடு. முதல் மாவட்டமாக கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்தியும், கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு மேலாக புதிய பாதிப்புகள் இல்லாத மாவட்டம் என்ற பெருமையையும் ஈரோடு பெற்றது. அதன்பிறகு மாவட்டத்தில் குறைந்த அளவிலான கொரோனா பாசிட்டிவ் கேஸ்களே ரிப்போர்ட் ஆகி வந்தன. ஆனால், கடந்த சில நாட்களாக ஈரோட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வருவதோடு, தினமும் 100-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது ஈரோடு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்துறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இன்றைய நிலவரப்படி கோயமுத்தூரில் 9,000 , சேலத்தில் 6,000 என்ற அளவில் கொரோனா பாதிப்புகள் இருந்தாலும், ஈரோட்டில் இந்த எண்ணிக்கை 1,500 என்ற அளவில் தான் இருக்கிறது. அருகிலுள்ள மாவட்டங்களைக் காட்டிலும் ஈரோட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது, ஈரோடு மக்களிடையே ஒருவித நம்பிக்கையை உண்டாக்கியிருந்தது. ஆனால், ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100-க்கும் மேலாக இருக்கிறது.

குறிப்பாக ஈரோட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்றைக்கு மட்டும் 137 பாசிட்டிவ் கேஸ்கள் ரிப்போர்ட் ஆகியிருக்கின்றன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,582 பேரில், 904 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கின்றனர். 25 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 653 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். பெருந்துறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 500 படுக்கைகள், ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள 100 படுக்கைகள் என அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் புதிதாக பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தகவல்களெல்லாம் ஈரோடு மக்களிடையே பெரும் பதற்றத்தை உண்டாக்கியிருக்கின்றன.

ஈரோடு

இதுசம்பந்தமாக ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள் அவர்களிடம் பேசினோம். “பெரும் தொழில் மாவட்டங்களால கோயமுத்தூர், திருப்பூருக்குச் செல்லும் அண்டை மாவட்ட மக்கள் ஈரோடு வழியாகத் தான் செல்கின்றனர். இதனால் தான் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. இன்னும் சில நாட்களுக்கும் இதே போல அதிக கேஸ்கள் ரிப்போர்ட் ஆகலாம்.

Also Read: மலேசியா: `கொரோனா வைரஸின் புதிய திரிபு’ - 10 மடங்கு வேகமாகப் பரவுவதாக எச்சரிக்கை

கோயமுத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்போதிலும், நாம் பாதிப்புகளை கட்டுக்குள் தான் வைத்திருக்கிறோம். இறப்புகளும் குறைவாகத் தான் இருக்கின்றன. இறந்தவர்களும் 70 வயதிற்கு மேற்பட்டவர்களாகத் தான் இருக்கிறார்கள். தினமும் 2 ஆயிரம் பேருக்கு டெஸ்ட் எடுத்து வருகிறோம். பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் 50 பெட்களும், ஈரோட்டில் 5 பெட்களும் எமர்ஜென்சிக்காக ரிசர்வ் செய்து வைத்திருக்கோம். கல்யாண மண்டபங்கள், பள்ளிகள், கல்லூரி விடுதிகள் போன்றவற்றை கோவிட் கேர் சென்டராக மாற்றி, 3 ஆயிரம் படுக்கை வசதிகளை தயார் செய்து வருகிறோம். பொதுமக்கள் எவ்வித அச்சமும் படத்தேவையில்லை. அறிகுறி தென்பட்டால் முன்வந்து டெஸ்ட் செய்து, முறையான சிகிச்சைகள் பெற்றாலே சரியாகிவிடும்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/corona-cases-increase-day-by-day-in-erode

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக