Ad

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

சென்னை: நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொல்ல முயன்ற மனைவி - போலீஸ் ஸ்டேஷன் சென்ற வீடியோ

சென்னை செனாய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (35), டிரைவர். இவரின் மனைவி சரண்யா, இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. சுரேஷின் வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வினோத் வந்து சென்ற நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் வினோத்துக்கும் சரண்யாவுக்கும் நட்பு ஏற்பட்டது. அதை சுரேஷ் கண்டித்தார். அதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதனால் சரண்யாவும் சுரேஷும் பிரிந்து வாழ்கின்றனர்.

சுரேஷ்

இந்தநிலையில் கடந்த 26-ம் தேதி இரவு சுரேஷை வினோத் தாக்கியதாக டி.பி.சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற சுரேஷிடம் வாக்குமூலம் பெற்றார். அதில், என் மனைவி சரண்யா என்னை விட்டு பிரிந்து வினோத் என்பவருடன் சென்றுவிட்டார். அதனால் மனமுடைந்த நான், செனாய் நகரில் உள்ள முதலாளி வீட்டிலேயே தங்கியிருந்தேன்.

ஜூலை 26-ம் தேதி என் மகளைப் பார்க்க இரவு 8 மணிக்கு 5 அடுக்கு மாதா கோயில் முன்பு வந்தபோது, திடீரென என்னை வழிமறித்த வினோத், எனது இடது முழங்கையில் வெட்டினான். நான் தடுக்க முயன்றேன். அப்போது மீண்டும் கத்தியால் எனது மூக்கின் மீது வெட்டினார். உடனே, நான் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். அப்போது உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று வினோத் மிரட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டான். எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுரேஷ் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், இந்திய தண்டனைச் சட்டம் 341, 294 (பி) 324, 506 (11) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

எப்ஐஆர்

வினோத்தை, சுரேஷ் வெட்டியதாக வினோத் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வினோத்திடமும் வாக்குமூலம் பெற்றிருக்கிறார். அதில், நான் செனாய் நகர் கல்லறை சாலையில் குடியிருந்து வருகிறேன். எனக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் குடியிருக்கும் சுரேஷ் என்பவரின் மனைவி சரண்யாவுக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டதாகவும், அதனால் சரண்யா வீட்டைவிட்டு வெளியில் சென்றதாகவும் சுரேஷ் கூறிவருகிறார். மேலும், சரண்யா என்னுடன்தான் சென்றுள்ளதாக சுரேஷ் என்பவர் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

Also Read: திருப்பூர்: `போலீஸுக்கு இந்த விளம்பரம் தேவையா?' - அதிர்ச்சி கொடுத்த கணவன், மனைவி சண்டை

நான் குடிநீர் கேன் சப்ளை செய்யும் வேன் டிரைவராக உள்ளேன். 26-ம் தேதி இரவு 5 அடுக்கு மாதா கோயில் முன் நான் நடந்து சென்றபோது சுரேஷ் என்னை வழிமறித்து தகராறு செய்தார். அப்போது அவர், `சரண்யா எங்கடா’ என்று கேட்டார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இடது தோள்பட்டையில் வெட்டினார். மீண்டும், என்னை வெட்டியபோது அதைத் தடுத்தேன். அப்போது என் உள்ளங்கையில் வெட்டு விழுந்தது. என்னுடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அதனால் சுரேஷ், என்னைக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டான். எனவே, சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்பேரில் 341, 294 (பி) 506 (11) ஆகிய பிரிவுகளின் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ண்ன் வழக்கு பதிவு செய்துள்ளார்.

வினோத் கொடுத்த புகார்

Also Read: சென்னை: `திருடிய நகைகள் காதலிக்கு; ரூ.20,000 செல்போன் ரூ.2,000’ - சிக்கிய சிறுவர்கள்

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் வாட்ஸ்அப் மூலம் தன் குடும்பத்தினருக்கும் காவல்துறையினருக்கும் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் `என்னைக் கொலை செய்ய, என் மனைவியும் வினோத்தும் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் எனக்கு தொலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதனால், எனது உயிருக்கு ஏதேனும் அசாம்பாவிதம் ஏற்பட்டால், அதற்கு என்னுடைய மனைவியும் வினோத்துமே காரணம்' என அந்த வீடியோவில் பதிவு செய்து அனுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் செனாய் நகரில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/husband-files-complaint-against-his-wife-and-her-boy-friend-over-murder-attempt

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக