Ad

வெள்ளி, 2 டிசம்பர், 2022

Pro Kabaddi: இரண்டே ஸ்பாட் மூன்றே போட்டிகள்; தமிழ் தலைவாஸ் அணி `பிளே ஆப்' க்குத் தகுதி பெறுமா?

புரோ கபடி ஒன்பதாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சீசன் தொடக்கத்தில் வழக்கம் போல தொடர் தோல்விகளைச் சந்தித்த தமிழ் தலைவாஸ் அணியைப் பயிற்சியாளர் அசன் குமார் வந்த பிறகு ஒரு புதிய தமிழ் தலைவாஸ் அணியாக மாற்றினார். தொடர் வெற்றிகளையும் தமிழ் தலைவாஸ் பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக ப்ளே ஆப் செல்லுமா எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் தலைவாஸ் அணியின் ப்ளே ஆப் வாய்ப்பைப் பற்றிய அலசல் இங்கே...
Tamil Thalaivas
தற்போது தமிழ் தலைவாஸ் 56 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். 54 புள்ளிகளுடன் தபாங் டெல்லி, 50 புள்ளிகளுடன் யு மும்பா, 49 புள்ளிகளுடன் பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

தலைவாஸ்க்கு அடுத்த மூன்று போட்டிகளை பார்த்தால் யுபி யோதா, தெலுங்கு டைட்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுடன் மோத உள்ளனர். இந்த மூன்று போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் நிச்சயம் வெற்றியைப் பெற வேண்டும். பிரதீப் நர்வாலின் யுபி யோதா அணியுடன் மோதும் ஆட்டம் மட்டும் தமிழ் தலைவாஸ்க்கு கடும் சவாலாக இருக்கும். அடுத்த இரண்டு போட்டிகளில் தெலுங்கு டைட்டன்ஸ் ,ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளை எதிர்கொள்ளவிருக்கின்றனர். ஏற்கனவே தெலுங்கு டைட்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டனர்.

Tamil Thalaivas

தமிழ் தலைவாஸ் எளிதாக இவ்விரண்டு அணிகளையும் வெல்லக்கூடும். ஆனால் அடுத்த மூன்று போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்து தபாங் டெல்லி ,பெங்கால் வாரியர்ஸ், யு மும்பா அணிகளின் முடிவுகளை பொறுத்து தமிழ் தலைவாஸ் ப்ளே ஆப்க்கு செல்வது கடினமாக ஆகிவிடும். எனவே தமிழ் தலைவாஸ் வெற்றிகளை பெரும் முனைப்பில் களமிறங்க வேண்டும்.

தமிழ் தலைவாஸ் அணியில் சாகர் இல்லையென்றாலும் டிஃபென்டர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். நரேந்தர் கண்டோலா மற்றும் அஜிங்கியா பவர் ஆகியோரின் ஆட்டங்கள் சிறப்பாக இருக்கின்றன.

ஆனால், ஆட்டத்தைச் சிறப்பாகத் தொடங்கும் தமிழ் தலைவாஸ் இரண்டாவது பாதியில் செய்யும் தவறுகளால் ஆட்டத்தின் வெற்றியை இழக்கின்றன. ஆகவே, கடைசி நிமிடங்களில் சிறப்பாக விளையாட வேண்டும். அதன் மூலம் வெற்றிகளை குவித்து பிளே ஆப்க்கு தகுதிப் பெற வேண்டும்.

முதன் முறையாக தமிழ் தலைவாஸ் பிளே ஆப் க்கு செல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.



source https://sports.vikatan.com/kabaddi/pro-kabaddi-tamil-thalaivas-playoffs-chances

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக