Ad

சனி, 5 ஜூன், 2021

Summer Camp: ஜாலியா கார் வரையலாம்; கார் டிசைனர் ஆகலாம்; கார் ஓட்டலாம்!

அது, சென்னை டான் போஸ்கோ பள்ளியில் உள்ள 6-ம் வகுப்புப் பாடசாலை. வரலாற்றுப் பாடவேளை. நமது தொன்மை வாய்ந்த சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய வரலாற்றை நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரி்யர். ஒரு மாணவன் மட்டும் பாடத்தைக் கவனிக்கவே இல்லை. குனிந்து தனது ரஃப் நோட்டில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தான். டீச்சருக்கு செம கோபம். ‛‛தொண்டைத் தண்ணி வத்த பாடம் எடுத்துக்கிட்டிருக்கேன். நோட்ல என்னடா கிறுக்கிக்கிட்டிருக்க?’’ என்று பிரம்பைக் கையில் எடுத்து, தான் நடத்திய பாடம் சம்பந்தமாகக் கேள்விகளாகக் கேட்டுத் துளைத்தெடுத்தார். ‛காதல் கொண்டேன்’ தனுஷ் மாதிரி ஒவ்வொன்றையும் போர்டில் வரைந்தே அந்தச் சிறுவன் அத்தனைக்கும் பதில் சொன்னபோது, மொத்த வகுப்பும் வியப்பில் ஆழ்ந்தது.

அவன் ரஃப் நோட்டை வாங்கிப் பார்த்தபோது, சிந்துசமவெளி நாகரிகமே உயிர் பெற்றதுபோல் இருந்தது. ஆம், அவர் நடத்திய மொத்தப் பாடமும், குழந்தைகளுக்கே உண்டான ஓவிய வடிவில் இருந்ததைக் கண்டு வியந்து போனார்கள் அனைவரும். தான் வரைந்த ஒவ்வொரு புள்ளிக்கும், ஒவ்வொரு கோட்டுக்கும் ஒரு குறியீடு இருந்ததைச் சுட்டிக்காட்டினான் அந்தச் சிறுவன். ‛‛எல்லாப் பசங்களும் எழுத்தால் குறிப்பெடுப்பாங்க. நான் டிராயிங்கிலேயே குறிப்பெடுத்துப்பேன். ஒரு டிராயிங்கைப் பார்த்தே அதோட மொத்த ஹிஸ்டரியையும் சொல்லிடுவேன்’’ என்று சொன்ன அந்தச் சிறுவனின் பெயர் சத்தியசீலன்.

Sathiyaseelan G

இப்போது சாலைகளில் நீங்கள் பார்க்கும் அசோக் லேலாண்ட் பேருந்துகள், ட்ரக்குகள், லாரிகள், கமர்ஷியல் வாகனங்கள், டாடா கார்கள், ஹூண்டாய் கார்கள், ஆட்டோக்கள் என ஏகப்பட்ட வாகனங்களை தனது டிராயிங் நோட்டில் வரைந்து, சாலைகளில் உயிர் கொடுத்து ஓட வைத்திருப்பது சத்தியசீீலன்தான். இவர், இப்போது அசோக் லேலாண்டின் தலைமை வடிவமைப்பாளர்.

Ashok Leyland Trucks

‛‛ஓர் ஆட்டோ என்றால் இப்படித்தான் டைனமிக்ஸ் இருக்க வேண்டும்; ஒரு பைக்குக்கு இப்படித்தான் நிலைத்தன்மை இருக்க வேண்டும்; ஒரு காரின் சக்கரங்களுக்கு இடையில் இவ்வளவுதான் இடைவெளி இருக்க வேண்டும்; ஒரு ட்ரக்குக்கு எர்கானமிக்ஸ் இப்படி இருந்தால்தான் சரிப்படும்’’ என்று அவர் ஒவ்வொரு வாகனங்களையும் பார்த்துப் பார்த்து டிசைன் செய்வது, ஒரு வாவ் ஃபேக்டர்!

‛‛நீங்கள் இதுதான் யானை என்று ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதைவிட, யானையை அந்தக் குழந்தையை விட்டே வரையச் சொல்லிக் கொடுத்துப் பழகுங்களேன்! அந்த யானையின் அளவுக்கு ஏற்ப தும்பிக்கையின் நீளம் இவ்வளவுதான் இருக்கும்; கால் பாதங்கள் இப்படித்தான் இருக்கும் என்று உங்களைவிட டேட்டா அனலைஸில் குழந்தைகள் கலக்குவார்கள்!’’ என்கிறார் சத்தியசீலன். அவர் சொல்வது நிஜம்தான்; ஓர் ஓவியத்தை நாமே வரைவதன் மூலம் அதன் டெக்னாலஜி, ஹிஸ்டரி, ஜியோகிரஃபி வரை எல்லாமே அலசி ஆராயலாம் என்பதுதான் உண்மை.

Photoshop Rendered Design

அப்படி ஒரு வொர்க்ஷாப்பைத்தான் இந்த சம்மர் லீவில் மாணவர்களுக்கு நடத்த இருக்கிறார் சத்தியசீலன். என்ன, அவர் இங்கே வரையச் சொல்லிக் கொடுக்கப்போவது, யானையை இல்லை; நாம் அன்றாடம் பயன்படுத்தும் கார்/ பைக்குகளை! ஆம், மோட்டார் விகடனுடன் சேர்ந்து அவர் நடத்தும் இந்த வொர்க்ஷாப்பின் பெயர் - கார் டிசைன் வொர்க்ஷாப். ஜூலை 3, 4, 9, 10, 11 என ஐந்து நாள்கள் நடக்கும் இந்த சம்மர் கேம்ப்பில் அப்படி என்ன ஸ்பெஷல்?

முதலில் ஒரு பேப்பர்/பென்சிலில் ஆரம்பிக்கும் இந்த வொர்க்ஷாப், கடைசியாக ஒரு மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனத்தில் அந்த மாணவனை கார் டிசைனராகப் பணிபுரியும் எல்லைக்குக் கொண்டு செல்லும்; இல்லை கொண்டு சென்றிருக்கிறது. கோவில்பட்டியைச் சேர்ந்த ஷரோன் ராமலிங்கம் எனும் மாணவர், இதற்கு ஆகப்பெரிய உதாரணம். கடவுள் படங்களை வரைவதில் செம ஆர்வமாக இருந்த ஷரோன் ராமலிங்கம், இப்போது ஒரு மிகப் பெரிய கார் டிசைனர். சீனாவில் உள்ள எம்ஜி நிறுவனத்தில் ஸ்டைஃபண்ட் தொகையுடன் இன்டர்ன்ஷிப் செய்த ஒரே தமிழன் - ஷரோன் ராமலிங்கம். கூடவே, ஆடி TT கார் டிசைனரின் உதவியாளராகவும் இருந்திருக்கிறார் என்பது ஸ்பெஷல். ‛‛இந்த வொர்க்க்ஷாப்புக்கு வரலைன்னா நான் சாமிப் படங்களை மட்டும்தான் வரைஞ்சுக்கிட்டு இருந்திருப்பேன். தேங்க்ஸ் டு சத்யா சார் அண்ட் மோட்டார் விகடன்’’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் ஷரோன் ராமலிங்கம். ஷரோன் போலவே இன்னும் ஏகப்பட்ட மாணவர்கள் - லண்டனில், ஜெர்மனியில், ஐரோப்பா நாடுகளில் படித்துக் கொண்டும், பணிபுரிந்து கொண்டும் இருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா?

Sharon Ramalingam

அப்படியென்றால், இந்த வொர்க்ஷாப், படிப்பு சம்பந்தமானதா... பாடம் சம்பந்தமானதா என்றால் இல்லை. ஓவியம் சம்பந்தப்பட்டது; நமது க்ரியேட்டிவிட்டி சம்பந்தப்பட்டது; தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டது. ஒரு காரை ஜாலியாக வரைவது எப்படி… அந்த காரை க்ளே மாடல் ஆக்குவது எப்படி… அதை கான்செப்ட் மாடலாக்குவது எப்படி… அதற்கு உயிர் கொடுத்து சாலைகளில் ஓட வைப்பது எப்படி… என்பது வரை எல்கேஜி ரைம்ஸ் போல, செம ஃபன்னாக நடக்க இருப்பதுதான் இந்த வொர்க்ஷாப்.

உதாரணத்துக்கு, ஒரு காரை டிசைன் செய்வதற்கு… நமக்குப் பெரிய பட்டறிவோ, பொதுஅறிவோ வேண்டும் என்றில்லை. நமக்குப் பிடித்த விலங்கினங்களில் இருந்துகூட, அதற்கான இன்ஸ்பிரேஷனை எடுத்துக் கொள்ளலாம். ஆரம்பத்தி்ல் கேட்ட கேள்விதான். நீங்கள் கார், பைக் ஓட்டுவீர்கள்; ஆனால் அந்த வாகனத்தை என்றாவது செல்லமாக உற்று நோக்கியதுண்டா? அதில் தெரியும் உயிரைக் கவனித்ததுண்டா? கியா காரின் கிரில்லைக் கவனியுங்கள்; புலியின் மூக்கு போலவே இருக்கும். அப்பாச்சி பைக்கை டாப் ஆங்கிளில் பாருங்கள்; சுறா மீனைப்போலவே இருக்கும். டாடா நெக்ஸான் காரின் பம்பரைக் கவனியுங்கள்; ஒரு மனிதன் சிரிப்பதுபோலவே இருக்கும். ஹூண்டாய் காரின் முன் பக்கம் தேன்கூட்டில் இருந்து எடுக்கப்பட்ட டிசைன். ஃபோர்டு கார்களின் டேஷ்போர்டு, ஓர் அருவியைப் போன்றே இருக்கும்.

Ashwin Designs

‛‛ஒரு தடவை டிவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தேன். விராட் கோலி சென்ச்சுரி அடித்து ஹெல்மெட்டையும் பேட்டையும் தூக்கி உற்சாக போஸ் கொடுத்தார். அதைப் பார்த்துத்தான் நான் அசோக் லேலாண்டின் லேட்டஸ்ட் ட்ரக் ஒன்றின் ஹெட்லைட் முன் பக்கத்தை டிசைன் செய்தேன்!’’ என்கிறார் சத்தியசீலன்.

Victory

இப்படி ஆட்டோமொபைல் டிசைனுக்கான இன்ஸ்பிரேஷன், நமக்குப் பக்கத்திலேயே இருந்து எடுக்கலாம் என்பது சுவாரஸ்யம்தானே! அட,நாம் சாப்பிடும் இட்லித் தட்டை இன்ஸ்பிரேஷனாக வைத்தும் ஒரு காரின் இன்டீரியரை டிசைன் செய்திருக்கிறார்கள் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.

டிசைன் இன்ஸ்பிரேஷன் தாண்டி, ஓவியப் பயிற்சியும் இந்த வொர்க்ஷாப்பின் முக்கிய நோக்கம். ஒரு புள்ளி… ஒரு கோடு - இந்த இரண்டை வைத்தே ஒரு பென் டிரைவ் முதல் பென்டகன் பில்டிங் வரை வரையலாம். அது எப்படி? அதையும் இந்தப் பயிலரங்கத்தில் சொல்ல இருக்கிறார் சத்தியசீலன்.

Audi Concept

போன வொர்க்ஷாப்பில் 7 வயதான சிறுவன், ‛ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்’ படத்தில் வரும் செவர்லே கமேரோ காரை, வொர்க்ஷாப்பில் கலந்துகொண்ட நான்காவது நாளில் நாலே நிமிஷத்தில் வரைந்து காட்டி அப்ளாஸ் அள்ளினான். இது மாணவர்களுக்கு ஆட்டோமொபைலில், ஓவியத்தில் எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பது புரிய வைத்தது.

இன்ஜினீயர்களுக்கு மட்டுமில்லை; இனிய உள்ளம் கொண்ட மாணவர்களுக்கான இந்த வொர்க்ஷாப், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நிச்சயம் ஒரு கதவைத் திறக்கும்.

Date: July 3, 4, 9, 10 and 11

Time: 08.00 AM to 10.00 AM

To Register, Click here: http://bit.ly/MV_CDW_Summer

5 Days Design Workshop


source https://www.vikatan.com/automobile/motor/car-design-workshop-summer-camp-for-school-children-july-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக