Ad

திங்கள், 21 ஜூன், 2021

சட்டசபையில் இன்று: இரங்கல் தீர்மானங்கள்; ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம்! Now At Vikatan

சட்டசபையில் இன்று.....!

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சிங்காரச் சென்னை 2.0, பொருளாதார ஆலோசனைக் குழு, லோக் ஆயுக்தாவுக்கு புத்துயிர், மீண்டும் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், 16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வரும் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில், இன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் மறைவுக்கு இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், காளியண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறும். நடப்பு கூட்டத்தொடரின் இறுதி நாளான 24-ம் தேதி முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு பதில் உரை வழங்குவார்.



source https://www.vikatan.com/news/general-news/22-06-2021-tn-assembly-happenings-and-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக