Ad

சனி, 5 ஜூன், 2021

Covid Questions: உணவின் மூலம் கொரோனா தொற்று பரவுமா?

உணவின் மூலம் கொரோனா தொற்று பரவுமா? ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவது ஆபத்தானதா?

தொற்று நோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவர் அப்துல் கஃபூர்.

``உணவின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று நிச்சயம் பரவாது. அது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சளித் திவலைகள், சுவாசப்பாதை திவலைகளின் மூலம் மட்டுமே பரவும். சமீபத்திய லான்செட் கட்டுரையில் கொரோனா வைரஸானது காற்றின் மூலமும் பரவும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Food

Also Read: Covid Questions: உடல் பருமன் இருப்பவர்களுக்கு கொரோனா ஆபத்து அதிகமா?

ஆன்லைனில் ஆர்டர் செய்தோ, வெளியிடங்களில் உணவு பார்சல் வாங்கும்போதோ, அதற்கு முன்பும் பிறகும் கைகளை சானிடைஸ் செய்துவிடுங்கள். கைகளை அடிக்கடி சானிடைஸ் செய்தோ, சோப்பு போட்டுக் கழுவியோ சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்".

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/will-corona-virus-spread-through-food

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக