Ad

வெள்ளி, 11 ஜூன், 2021

பழைய கோயில்களைப் புனரமைக்க வேண்டியது அவசியம்... ஏன்? - அதிகாலை சுபவேளை!

இன்றைய பஞ்சாங்கம்

12. 6. 21 வைகாசி 29 சனிக்கிழமை

திதி: துவிதியை இரவு 7.38 வரை பிறகு திரிதியை

நட்சத்திரம்: திருவாதிரை மாலை 4.39 வரை பிறகு புனர்பூசம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம்: பகல் 1.30 முதல் 3 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 4.30 முதல் 5.30 வரை

திருப்பதி ஏழுமலையான்

சந்திராஷ்டமம்: அனுஷம் மாலை 4.39 வரை பிறகு கேட்டை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள்

பழைய கோயில்களைப் புனரமைக்க வேண்டுமா? அதிகாலை சுபவேளை

நம் பாரத தேசம் ஆன்மிக பூமி. தேசமெங்கும் கோயில்கள் சிறிதும் பெரிதுமாக நிறைந்து காணப்படும். ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது பழமொழி. மன்னர்களும் மக்களும் பிரமாண்டமன கோயில்களை எழுப்பி வழிபாடுகள் செய்தனர். அவ்வாறு எழுப்பப்பட்ட கோயில்களின் பட்டியல் பல லட்சம். காலவெள்ளத்தில் பல ஆலயங்கள் சிதைந்துவிட்டன. அந்நியர் படையெடுப்பால் பராமரிப்பின்மையால் பல மண்ணோடு மண்ணாகிவிட்டன. எஞ்சியிருக்கும் சில ஆயிரம் கோயில்களைப் புனரமைக்கவே மிகுந்த சிரத்தை எடுக்க வேண்டும். செலவும் நேரமும் எடுக்கும் இந்தச் செயலைச் செய்யவேண்டுமா? இருக்கும் கோயில்களைப் பராமரித்தால் போதுமே என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களின் கேள்விக்கான பதிலை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். குழப்பங்கள் பிற்பகலுக்கு மேல் நீங்கிவிடும். - ஆல் இஸ் வெல்!

ரிஷபம்

கவனம் : புதிய முயற்சிகளில் கவனம் தேவை. சகோதர உறவுகளால் நன்மைகள் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் பணிச்சுமையும் அதனால் சோர்வும் ஏற்படும். - டேக் கேர் ப்ளீஸ்!

மிதுனம்

அனுகூலம் : செயல்கள் அனுகூலமாக முடியும். மனம் இறைவழிபாட்டில் ஈடுபடும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்குத் துணை நிற்பார்கள். - ஆல் தி பெஸ்ட்!

கடகம்

செலவு : பணவரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை முயன்று நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள்.- செலவே சமாளி!

சிம்மம்

சாதகம் : செயல்கள் அனுகூலமாக முடியும். பணவரவும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். - சாதகமான ஜாதகம் இன்று!

கன்னி

அலைச்சல் : செயல்களில் வெற்றி ஏற்பட்டாலும் தேவையற்ற அலைச்சலும் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

துலாம்

தெளிவு : நேற்றுவரையிருந்த குழப்பங்கள் தீரும். பணவரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலிருந்த பின்னடைவுகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் நாள். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

விருச்சிகம்

பதற்றம் : தேவையற்ற பதற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் பேசும்போது பேச்சில் நிதானம் தேவை. செயல்களில் பொறுமை அவசியம். - இறைவன் இருக்க பயம் ஏன்?!

தனுசு:

பணவரவு : எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் அதிகரிக்கும். - என் ஜாய் தி டே!

மகரம்

நன்மை : இன்று நாள் முழுவதும் நன்மைகள் நடைபெறும் நாள். தேவையான பணம் கிடைக்கும். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டாகும். - நாள் நல்ல நாள்!

கும்பம்

ஆரோக்கியம் : செயல்கள் அனுகூலமாகும் என்றாலும் உடல் நலனில் அக்கறை தேவை. உணவால் அலர்ஜி போன்றவை ஏற்படலாம். பணவரவு ஆறுதலாக இருக்கும். - ஹெல்த் இஸ் வெல்த்!

மீனம்

நம்பிக்கை : மனதில் உற்சாகமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். செயல்களில் துணிவும் தெளிவும் வெளிப்படும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொள்வார்கள். - ஜாலி டே!



source https://www.vikatan.com/spiritual/temples/why-should-we-need-to-renovate-the-old-temples

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக