Ad

ஞாயிறு, 6 ஜூன், 2021

` ஆட்சி சரியா இருக்கு' - முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு சீமான், பாரதிராஜா பேட்டி!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது முதலமைச்சரின் கொரோனா பேரிடர் நிதிக்கு, சீமான் நிதியளித்தார்.

சீமான் பாரதிராஜா

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ``எனது தந்தையின் மரணத்தின் போது ஆறுதல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதுவே எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. அவர் நினைத்திருந்தால் அதோடு விட்டிருக்கலாம். ஆனால், அவர் என்னை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியது என்னை நெகிழவைத்துவிட்டது. இந்த சந்திப்பஇ நான் பெருமைக்குரியதாக பார்க்கிறேன்.

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை பற்றி முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். அவர் அதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். பிளஸ் 2 தேர்வு நடத்துவதா வேண்டாமா என்று ஆலோசனை நடத்தி வருவதாக கூறினார்கள். மாணவர்களின் உயிர் தான் முக்கியம். ஒரு வருடம் தேர்வு எழுதாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது. எனது கருத்தையும் தெரிவித்திருக்கிறேன்." என்றார்.

Also Read: 'திருவொற்றியூரில் 3-வது இடம்;தோற்றாலும் வென்றாரா சீமான்!'#TNelections2021

புதிய அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, `` ஆட்சி சரியா இருக்கு. நல்லா வேகமா இயங்குறாங்க. மருத்துவத்துறையில அண்ணன் மா.சு சிறப்பா இயங்குறாரு " என்றார். தி ஃபேமிலி மேன் -2 தொடர் குறித்து கேட்க்கப்பட்ட கேள்விக்கு, ``ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தமிழ் தீவரவாத அமைப்புகள் என்பது போல தொடர்புபடுத்தி கொண்டுவருகிறார்கள். பா.ஜ.க அரசால் எங்கு கால் பதிக்க முடியவில்லையோ, அங்கெல்லாம் பயங்கரவாத இயக்கம் என்ற பிம்பத்தை கட்டமைக்க நினைக்கிறது. நாங்கள் ( விடுதலைப் புலிகள்) இன விடுதலைக்காக போராடத் தொடங்கினோம். சிங்கள அரச பயங்கரவாதத்தை கண்டிக்காத இந்த அரசு (பா.ஜ.க) எங்களை பயங்கரவாதிகள் என்று கூறும் இதுபோன்ற தொடர்களை அனுமதித்துக் கொண்டிருக்கிறது." என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/seeman-director-barathiraja-meets-cm-stalin-says-government-is-acting-good

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக