இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 91,702 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,92,74,823 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,403. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,63,079-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,77,90,073 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 11,21,671 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 1,34,580 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.
இந்தியாவில் இதுவரை 24,60,85,649 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு! - காங்கிரஸ் போராட்டம்!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் விலை 100 ரூபாயை கடந்துவிட்ட நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் 97.19 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.42 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது. தேசிய, மாநில, மாவட்ட அளவில் பெட்ரோல் நிலையங்கள் முன் போராட்டங்களை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தில், தேசிய மற்றும் மாநில தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
source https://www.vikatan.com/news/general-news/11-06-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக