பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தில் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி வேலை செய்தாலும் ஊதியம் சரி வர வராத இந்த காலத்திலும், ஒருவர் பல வருடங்களாய் வேலைக்கு செல்லாமலே ஊதியம் பெற்று வந்தார் என்றால் நம்ப முடிகிறதா?
அதுவும், ஒரு வருடமோ, இரண்டு வருடமோ இல்லை. பதினைந்து வருடங்களாக இது போன்று அவர் சம்பாதித்து உள்ளார்.
ஆம்.
அது தான் உண்மை. இத்தாலியில் உள்ள கலாபிரியா (Calabria) என்ற மாநிலத்தின் தலைநகரமான கட்டன்சாரோ (Catanzaro) என்ற நகரத்தின் மருத்துவமனையில் தான் இந்த அதிசய நிகழ்வு நடைபெற்றுள்ளது.

1975ம் ஆண்டு நோபல் பரிசு வென்ற இத்தாலிய அமெரிக்கர் ரெனாட்டோ டுல்பெக்கோ (Renato Dulbecco) என்ற தீநுண்மி (virologist) விஞ்ஞானியால் உலகப்பார்வையை இந்த நகரத்தின் மீது படிந்தது.
இன்று மீண்டும் உலகப்பார்வையை ஈர்த்துள்ளது இந்நகரம். ஆனால், இந்த ஊழலின் காரணமாக.
அது எப்படி ஒருவருக்கு அவர் வேலை செய்யாமலேயே இத்தனை வருடங்கள் சம்பளம் பட்டுவாடா செய்ய முடியும்னு யோசிக்கிறீங்களா? சொல்லுறேன்.
அந்த அதிசிய மனிதரின் பெயர் சல்வதோரே ஸ்குமாச்சே (Salvatore Scumace). 67 வயதான இவர் கட்டன்சாரோ என்ற நகரத்திலுள்ள மருத்துவமனை சார்ந்த சேவையில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2005ம் ஆண்டு அவரை ஒரு புதிய பிரிவில் நியமித்துள்ளனர். ஆனால் இவர் சரிவர வேலைக்கு வருவதில்லை. இதை எதிர்த்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலாளர் முடிவு செய்த பொழுது ஒரு influential person அந்த மேலாளரை மிரட்டியுள்ளதாக தெரியவருகிறது.
மிரட்டலுக்கு பணிந்த அந்த மேலாளரும் அடுத்து சில மாதங்களில் ஓய்வு பெற்ற பின், இவரின் வருகையை கண்காணிக்க தவறி உள்ளார்கள் அடுத்து பொறுப்பேற்ற புதிய மேலாளர். இவர் மட்டுமல்ல. அந்த நிறுவனத்தின் எச்.ஆர் மேனேஜர் அவர்களும் இதை கவனிக்க தவறியதே இந்த பெரும் குற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
இப்படியே 15 வருடம் உருண்டோடிவிட்டது. இந்நிலையில் இதுவரை இவர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?
€5,38,000!! நமது இந்திய ரூபாய் மதிப்பில் நான்கு கோடிகளுக்கு மேல்.
இவர் மட்டுமல்ல, இது போன்று ஏமாற்றி வந்த பல நபர்களில் இவர் மட்டுமே மிக அதிக ஆண்டு இந்த சாதனை படைத்துள்ளது இவரின் பெயர் வெளியில் பரவ தொடங்கியுள்ளது.
இது என்ன அதிசயம். எங்க ஊர்ல வேலையே செய்யாமல் சம்பளம் மட்டுமல்ல ஓய்வூதியமும் சேர்ந்து வாங்குற எத்தனையோ அரசு அலுவலர்கள், அரசியல் புள்ளிகள் இருக்காங்க என்று நீங்கள் முணுமுணுக்கிறது கேக்குது.
வீட்டுக்கு வீடு வாசப்படி!
இத்தாலியிலிருந்து,
மகேஸ்வரன் ஜோதி
கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ
தமிழகத் தேர்தல் களம் முடிவுகளை எதிர்பார்த்து அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;
தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ
உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle
source https://www.vikatan.com/oddities/miscellaneous/corruption-incident-in-italy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக