Ad

வியாழன், 7 ஜனவரி, 2021

"தனுஷுக்குப் பதில் நான்... எனக்கு பதில் தனுஷ்!"-`ஆயிரத்தில் ஒருவன் 2.0'-ல் பார்த்திபன் நடிக்கிறாரா?!

இயக்குநர், நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனில் 'ஆண்Line பெண்Line Thought Com' எனும் தொடர் எழுதிவருகிறார். வாசகர்கள் கேட்கும் பல குண்டக்க மண்டக்க கேள்விகளுக்கும் சுவாரஸ்யமான பதில்களை அளித்துவருகிறார். இதில் இந்த வாரம் அந்தத் தொடருக்காக வாசகர் ஒருவர் செல்வராகவன் அறிவித்திருக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2.0 பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கான பார்த்திபனின் பதில் இங்கே!

"ஆயிரத்தில் ஒருவன் 2.0 அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. நீங்கள் அந்தப்படத்தில் நடிக்கிறீர்களா, தனுஷ் நடிப்பதாக செல்வராகவன் போஸ்டர் வெளியிட்டிருக்கிறாரே?"

- மாறன், சென்னை

ஆயிரத்தில் ஒருவன் 2.0

"'ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2' பற்றி சரியான தகவல் சொல்ல மிகச் சரியானவர் இயக்குநர் செல்வராகவன்தான். லேட்டஸ்ட்டா அந்தப் படத்துக்கு கிடைச்சிருக்க மிகப்பெரிய பாராட்டு அவருக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கலாம். நானும் அவர்கிட்ட பலமுறை 'எப்ப சார் ஆயிரத்தில் ஒருவன் பார்ட்-2 எடுக்கப்போறீங்க'ன்னு கேட்டிருக்கேன். செல்வராகவன், `கிளைமாக்ஸ்ல கார்த்தி தூக்கிட்டு வர்றக்குழந்தை பெரியவன் ஆனதுக்கு அப்புறம் நீங்கதான்'னு சொல்லித்தான் என்னை இந்தப் படத்துல நடிக்க வெச்சார். இதைப்பற்றி ஏற்கெனவே நான் சொல்லியிருக்கேன். இப்ப தனுஷ் பண்றதா அறிவிப்பு வந்திருக்கு. ரொம்ப சந்தோஷம். ஏற்கெனவே நான் பண்ண கேரக்டரையே மிஸ்டர் தனுஷ்தான் பண்றதா இருந்தது. ஏதோ காரணத்துக்காக நான் பண்ணேன். அந்தப் படம் ஏற்கெனவே இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ல இருக்கற படம். இப்ப தனுஷ் மிகப்பெரிய இன்டர்நேஷனல் ஸ்டார். இன்னும் அந்தப் படம் பெரிய ப்ராஜெக்ட்டா மாறும். இந்த மாதிரி படங்களுக்கு பட்ஜெட்தான் பிரச்னையா இருக்கும். அது இல்லாம இருந்தா நல்லாயிருக்கும்.

'என்னயிருந்தாலும் கிங்குக்கு பார்த்திபன்தான் சரியான சாய்ஸ்'னு ட்விட்டர்ல நிறையப் பேர் பாராட்டியிருந்தாங்க. ரொம்ப சந்தோஷம். மீண்டும் அந்தப் படத்துல கார்த்தி இருக்கணும், பார்த்திபன் இருக்கணும்னும் நிறைய பதிவுகள் பார்த்தேன். ட்விட்டர்ல நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாததனால, விவாதங்களை ஒரு பாசிட்டிவ் நோட்டுக்கு மாத்தாலமேன்னு, 'அவரும் இருந்தால் பவரும் கூடுமே'ன்னு ட்வீட் பண்ணியிருந்தேன். எங்களுக்கு மேல அவரும் ஒரு கதாபாத்திரத்துல நடிச்சா நல்லாயிருக்குமேன்ற அர்த்தத்துல சொன்னேன். பெரிய படத்துல நிறைய ஸ்டார்ஸ் நடிக்க வேண்டிய கட்டாயம் வரும். அப்படி வந்ததுன்னா தனுஷ் படத்துல நானும் நடிக்கலாம். அதேசமயம், ஏற்கெனவே ஒரு வாய்ப்பு கொடுத்தற்காக செல்வராகவனை நான் எப்பவும் நன்றி பாராட்டிக்கிட்டே இருப்பேன்!"



source https://cinema.vikatan.com/tamil-cinema/dhanush-or-parthiban-who-is-in-or-who-is-out-of-aayirathil-oruvan-20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக