Ad

செவ்வாய், 22 டிசம்பர், 2020

``ரம்யா நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க!''... அந்த பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்?!

''ரம்யா நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க'', ''பாலாஜி நீங்க கன்ஃபஷன் ரூமுக்கு வாங்க'', ''அனிதா மைக்கை மாட்டுங்க''... கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் பார்க்கும் அத்தனைப் பேருக்கும் இந்தக் குரல் அவ்வளவு பரிட்சயம். போட்டியாளர்களே இந்த பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரரைப் பார்க்க ஏங்கும் நிலையில், நாம் நம் தேடுதல் வேட்டையில் இறங்கினோம்.

சீரியல் நடிகர் அமித் பார்கவின் குரல்தான் அது என சிலர் சொல்ல, அமித் பார்கவிடம் பேசினால், "ஒரேயொரு சீசன்ல வாய்ஸ் தந்தேன்... அதுவும் கன்னட பிக்பாஸுக்கு'' என்றார்.

தேடுதல் படலத்தை தீவிரப்படுத்தியதில் தமிழ் பிக்பாஸின் முதல் சீசனிலிருந்து தற்போது வரை பிக்பாஸ் குரலாக ஒலிப்பவரின் முழு விவரமும் கிடைத்தது.

சாஷோ என அழைக்கப்படும் சச்சிதானந்தம் என்பவரின் குரல்தான் பிக்பாஸின் குரல். ''பிக்பாஸ் வாய்ஸ் கொடுத்து வரும் சாஷோ வெறும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் மட்டுமல்ல, பாலிவுட் நடிகர்'' என அதிரவைத்தார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

சாஷோ

கலப்பட பெட்ரோல் நெட்வொர்க்கை அம்பலப்படுத்தியால் படுகொலை செய்யப்பட்ட மஞ்சுநாத்தின் பயோபிக்கில் நடித்தவர்தான் சாஷோ. 2014-ல் இந்தியில் வெளியான இப்படம் சிறந்த நடிகருக்கான விருதையும் சாஷோவுக்கு பெற்றுத்தந்திருக்கிறது.

நடிப்பு, டப்பிங் இவற்றின் நடுவே பாடவும் செய்வாராம் சாஷோ என்கிற சச்சிதானந்தம். தினமும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஏதோ ஒரு பாடல்போட்டு போட்டியாளர்களை எழுப்புவதற்கு பதில் பிக்பாஸ் தன் சொந்தக் குரலில் பாடியே போட்டியாளர்களை எழுப்பலாம்.

திறமைக்கு மரியாதை தரலாமே பிக்பாஸ்!

பிக்பாஸ் சாஷோ குறித்த மேலதிக தகவல்கள் நாளை வெளிவரும் ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கிறது. தவறாமல் படியுங்கள்!


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/meet-the-voice-behind-bigg-boss-tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக