Ad

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

`என் எதிர்காலமே உங்கள் கையில் தான் இருக்கிறது!'- கை இழந்த பாக்கியலட்சுமி உருக்கம்

நெல்லை மாநகராட்சியில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் ஒப்பந்தப் பணியாளராகத் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார். மாநகராட்சி சார்பாக நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இயந்திரத்தில் சிக்கி அவரது வலது கை சிதைந்து துண்டானது.

விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி

கை இழந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் பாக்கியலட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார். மாநகராட்சி சார்பாக ஒப்பந்தப் பணியாளர்களுக்கு எந்தப் பயிற்சியும் அளிக்காமல் இயந்திரத்தில் பணியாற்றச் செய்வதால் இத்தகைய விபத்துகள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

விபத்தில் கையை இழந்த பாக்கியலட்சுமி குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என ஒப்பந்தப் பணியாளர் கூட்டமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால், தமிழக அரசு சார்பாக பாக்கியலட்சுமி குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

போராடும் ஒப்பந்தப் பணியாளர்கள்

இந்த நிவாரண உதவித் தொகை போதாது என பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இந்தநிலையில், தன்னுடைய வறுமையான சூழலைக் கவனத்தில் கொண்டு முதல்வர் உதவி செய்ய வேண்டும் என பாக்கியலட்சுமி உருக்கமாக வேண்டிக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பாக்கியலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில் ``ஒற்றைக் கையை இழந்த நிலையில் சிகிச்சைபெறும் எனக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறார். நான் வேலைக்குச் சென்றால் மட்டுமே என் குடும்பம் பசியாற முடியும்.

கையை இழந்த பாக்கியலட்சுமி

இப்போதைய சூழலில் என்னால் மறுபடியும் முன்பு போல வேலை செய்ய இயலுமா என்பது தெரியவில்லை. என் மீது கருணை கொண்டு, எனக்கு நிரந்தப் பணி கொடுக்க வேண்டும். என் வாழக்கையை முடிந்து எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டது. ஆனால், முதல்வர் அய்யா கருணை வைத்தால் மட்டுமே என் குடும்பத்தால் வாழ முடியும்” எனத் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த வீடியோ வைரலாகி வருகிறது.,



source https://www.vikatan.com/news/tamilnadu/nellai-corporation-worker-seeks-governments-help

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக