Ad

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

கரூர்: `வெளியே ஹோட்டல்; பின்புறம் சட்டவிரோத பார்!’- தோகைமலை அதிர்ச்சி

தோகைமலையில் கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக மதுபான பார் நடத்திய ஹோட்டலை குளித்தலை தாசில்தார் சீல் வைத்து, போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டவிரோத பார்

கரூர், மாவட்டம் தோகைமலை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், தோகைமலை பகுதியல் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட குளித்தலை துணை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, வணிக நிறுவனங்களுக்கும், கடைகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

சட்டவிரோத பார்

இந்நிலையில், குளித்தலை சப்-கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்திரவின் பேரில், தோகைமலை பகுதியில் குளித்தலை தாசில்தார் முரளிதரன் தலைமையில், மண்டல துணை தாசில்தார் இந்துமதி, ஆர்.ஜ நீதிராஜன், தோகைமலை எஸ்.ஐ கதிரேசன், வி.ஏ.ஓ சிவசக்தி, அலுவலர் பாக்கியராஜ் மற்றும் அலுவலர்கள் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.

Also Read: புதுக்கோட்டை: `சட்டவிரோத மதுவிற்பனை; போலீஸாரே மிரட்டுகிறார்கள்!’- கொதிக்கும் மக்கள்

அப்போது, மணப்பாறை - குளித்தலை சாலையில், தோகைமலை ஒன்றிய அலுவலகம் அருகே தனியார் ஹோட்டலில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறியும், தொற்று பாதுகாப்பு விதி முறைகளின் படி முககவசம் அணியாமலும், சட்ட விரோதமாக மதுபான பார் நடத்தி வந்ததும் ஆய்வில் தெரியவந்தது. வெளியே ஹோட்டலை நடத்திவிட்டு, அதன் உரிமையாளர் கோபால் ஹோட்டலுக்குப் பொன்புறம் உரிய அனுமதியின்றி பார் நடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

ஹோட்டல்

இதனை அடுத்து ஹோட்டலிலிருந்து 25 மது பாட்டில்கள் மற்றும் ஒரு சமையல் சிலிண்டரையும் கைப்பற்றி ஹோட்டலுக்கு தாசில்தார் முரளிதரன் சீல் வைத்தார். பின்னர், மது பாட்டில்களை தோகைமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தாசில்தார் உத்திரவிட்டார். தோகைமலை காவல்நிலைய போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர், ``தோகைமலையில் உள்ள முக்கியப் பகுதியில், யூனியன் அலுவலகத்துக்கு எதிரேதான் இந்த ஹோட்டல் உள்ளது. கடந்த ஒருவருடமாக இயங்கிவரும் இந்த ஹோட்டலில், ஒருவருடமாகமே சட்டவிரோத பாரும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், தோகைமலை காவல் நிலைய போலீஸார் அந்த பாரை மூடி, நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கிறார்கள். கோபால் கடந்த ஒருவருடத்துக்கு முன்புவரை, தோகைமலை டாஸ்மாக் அருகில் உள்ள பாரை ஏலம் எடுத்து நடத்திவந்தார்.

சட்டவிரோத பார்

அந்தப் பகுதி ஆளுங்கட்சி ஒன்றிய கவுன்சிலர் ஒருவர் தனது பவர் மூலம், கோபால் நடத்தி வந்த பாரை கேன்சல் செய்ய வைத்து, அதை தான் ஏற்று நடத்திவருகிறார். அதனால், சட்டவிரோதமாக பார் நடத்த ஏதுவாக ஒருவருடம் முன்பு ஹோட்டலை ஆரம்பித்து, ஹோட்டலுக்குப் பின்னே இந்த சட்டவிரோத பாரை நடத்தி வந்திருக்கிறார். கொரோனாவால அந்த பார் மீது நடவடிக்கை எடுத்திருக்காங்க" என்றார்கள்.



source https://www.vikatan.com/news/crime/kulithalai-government-officials-sealed-illegal-bar-and-hotel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக