மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை!
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து வரும் 28-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பொதுமுடக்கம் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவதால் கட்டுப்பாட்டை அதிகரிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று வழக்கு விசாரணை!
தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் தபாலில் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு தொடர்ந்துள்ளது. 80 வயதுக்கு மேலானவர்களுக்கு தனியாக வாக்குச்சாவடி அமைக்கலாம் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
source https://www.vikatan.com/news/general-news/23-12-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக