பெண்களை ஆபாச வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு பணம் சம்பாத்தித்து வந்த மாடலும், டிவி நடிகையுமான கெஹானா வசிஸ்த் (Gehana Vasisth) மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யபட்டார்.
மும்பையைச் சேர்ந்த பிரபல நடிகையும், மாடலுமான வந்தனா திவாரி (கெஹானா வசிஸ்த் – மேடைப் பெயர்) சின்னத்திரை தொகுப்பாளராக அறிமுகமானார். பின்னர் ஒரு சில விளம்பரப்படங்களில் நடித்ததன் மூலம் கடந்த 2012-ம் ஆண்டு `மிஸ் ஆசியா பிகினி’ போட்டியில் பங்கேற்று பட்டம்பெற்றார். அதன் பின்னர், ஒரு சில பாலிவுட் படங்களிலும், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வந்தவர், புதிதாக ஒரு படம் எடுப்பதாகக் கூறி அதற்கு புதுமுகங்கள் தேவையென்று விளம்பரம் கொடுத்துள்ளார்.
அதைக் கண்ட பெண்கள் சிலர் இவரிடம் வாய்ப்புக் கேட்டு வந்துள்ளனர். அப்படி வந்த பெண்கள் பலரை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்துள்ளார். இந்நிலையில், இது குறித்து தகவலறிந்த மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய, மும்பை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், ``கெஹானாவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து பெண்களை நடிக்க வைப்பதாகக் கூறி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதன் மூலம் பல லட்சம் ரூபாய் பணம் சம்பாதித்து வந்துள்ளனர். இதுவரை 87 வீடியோக்களை எடுத்து பதிவேற்றியுள்ளனர். மேலும் இதனை இணையத்தில் பார்க்க பார்வையாளர்களிடம் 2,000 ரூபாய் சந்தாவாக வசூலித்துள்ளனர்.
Also Read: வீட்டிற்கே சென்று உதவிகள்... பாலியல் கொடுமைக்கு உள்ளானவர்களை மீட்கும் காவல்துறையின் `தோழி’
மும்பையின் சொகுசு பங்களா ஒன்றில் தங்கி இதனை செய்து வந்த கெஹானா வசிஸ்த், பல பெண்களை தன் வசம் வைத்துகொண்டு இக்குற்றச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவர் தங்கியிருந்த பங்களாவில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் அவர்களிடமிருந்த கேமரா, மெமரி கார்டுகள், லேப்டாப், 36 லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் சிக்கியிருந்த பெண்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுள்ளனர். கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பெரும்பாலானோரை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் குற்றச்செயலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
source https://www.vikatan.com/news/crime/tv-actress-in-mumbai-arrest-for-illegal-video
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக