மதிப்பெண் தான் அறிவை அளவீடு செய்வதற்கான அளவுகோலா?
பிரதமர் மோடி இன்று புதிய கல்வி கொள்கை குறித்து பேசினார். அப்போது அவர், ``மாணவர்கள் சுயமாக கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வெளியுலகில் மாணவர்கள் கற்க வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கிறது. கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாம்” என்றவர், தொடர்ந்து, ``பெற்றோர்கள் பிள்ளைகளோடு உரையாடும் போது நீ என்ன கற்றாய் என்று கேட்பதில்லை... அதற்கு மாறாக எத்தனை மதிப்பெண்கள் பெற்றாய் என்றுதான் கேட்கின்றனர். தேர்வுகளும், மதிப்பெண்களும்தான் ஒரு மாணவனுடைய அறிவை அளவீடு செய்வதற்கான அளவுகோலா?” என கேள்வி எழுப்பினார்.
source https://www.vikatan.com/news/general-news/11-09-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக