Ad

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

ரிலையன்ஸ் ரீடெய்லின் 40% பங்குகள்... முதலீடு செய்யப்போகிறதா அமேசான்?

ஜியோவைத் தொடர்ந்து ரிலையன்ஸின் ரீடெய்ல் வென்ச்சர்ஸிலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளது முதலீட்டு உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த புதன்கிழமை அன்று ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தினுடைய அமெரிக்காவின் சில்வர் லேக் பார்ட்னர்ஸ் நிறுவனம் $1 பில்லியன் அளவுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7,500 கோடி) முதலீடு செய்தது. இதைத் தொடர்ந்து, தற்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் 40% பங்குகளை அமேசான் நிறுவனத்துக்கு விற்கும் நடவடிக்கையில் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்கியிருக்கிறது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தில் கேகேஆர்&கோ, முபாடாலா முதலீட்டு நிறுவனம் மற்றும் அபுதாபி முதலீட்டு அதிகாரம் (Abhudhabi Investment Authority) ஆகிய நிறுவனங்கள் $5 பில்லியன் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளனர். இந்த நிறுவனங்கள் அனைத்தும் தலா $1 பில்லியன் அளவுக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில்வர் லேக் நிறுவனம் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தை $57 பில்லியன் அளவுக்கு மதிப்பிட்டுள்ளது. ஆனால், இது சந்தை மதிப்பைவிட 7% குறைவு!

இந்தப் புதிய முதலீடுகள் மூலம் ரிலையன்ஸால் சந்தை வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள முடியும். மேலும் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிடவும் இது வசதியாக இருக்கும்.

சில்வர் லேக் நிறுவனம் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தை $57 பில்லியன் அளவுக்கு மதிப்பிட்டுள்ளது. ஆனால், இது சந்தை மதிப்பைவிட 7% குறைவு என ஜேபி மார்கன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ரிலையன்ஸ் நிறுவனத்தை $65 பில்லியனாக மதிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

ஊரடங்கு காலத்திலும் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம்தான் அதிக முதலீட்டாளர்களை ஈர்த்தது. தற்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸிலும் முதலீடு செய்ய முதலீட்டாளர்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், ஜியோவில் முதலீடு செய்த நிறுவனங்களுக்கு, ரிலையன்ஸ் ரீடெயிலில் முதலீடு செய்யவும் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னுரிமை அளித்து வருகிறது.

கடந்த மே மாதம்தான் இ-காமர்ஸ் துறையிலும் ரிலையன்ஸ் நிறுவனம் காலடி எடுத்து வைத்தது. இந்தியா முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜியோ மார்ட்டை தொடங்கியது. அப்போதிலிருந்து தினமும் 2,50,000 ஆர்டர்கள் வருவதாக அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார். இதன் பின்னர் தினமும் 4,00,000 ஆர்டர்கள் வரை தற்போது ஜியோ மார்ட்டுக்கு வருவதாகத் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய ரீடெய்ல் நிறுவனமாகும். இதற்கு இந்தியாவில் 12,000 கடைகள் உள்ளன. சமீபத்தில்தான் ப்யூச்சர் க்ரூப்ஸின் ரீடெய்ல் வணிகத்தையும் ரிலையன்ஸ் நிறுவனம் ₹24,713 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. இதனால் ரீடெய்ல் கடைகளின் எண்ணிக்கையானது 13,500-யைத் தொட்டிருக்கிறது. இதன்பின்னர், இந்தியாவின் மொத்த ரீடெய்ல் வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.

ரீடெய்ல் வணிகம்

இவ்வாறு ஒட்டுமொத்தமாக எல்லா வணிகங்களிலும் ரிலையன்ஸ் நிறுவனம் அதிக முதலீட்டைப் பெற்று வருகிறது. எதிர்காலத்தில் அதிகப்படியான வணிகங்களை ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றவும் இது நிச்சயம் வழிவகுக்கும் என்றே துறை சார்ந்த வல்லுநர்கள் கருதுகின்றனர். ஏற்கெனவே, பெரும்பாலான முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் நிறுவனத்திலும் முதலீடு செய்வதில் மும்முரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/business/finance/reliance-offers-40-stake-to-amazon-in-its-retail-unit

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக