Ad

வியாழன், 18 மார்ச், 2021

பட்டப்பகலில் வானவேடிக்கை; புகை சூழ்ந்த நகரம்! - அபராதத்தில் முடிந்த அதிமுக வேட்புமனு தாக்கல்

அதிமுக, பாஜக கூட்டணியில் குன்னூர், கூடலூர் தொகுதியில் அ.தி.மு.கவும், ஊட்டி தொகுதியில் பாஜக-வும் களம் காண்கின்றன. கூடலூர் தொகுதியில் பொன்.ஜெயசீலனும், குன்னூர் தொகுதியில் மாவட்ட செயலாளர் வினோத்தும் போட்டியிடுகின்றனர்.

admk

சிட்டிங் எம்.எல்‌.ஏவுக்கு கல்தா கொடுத்தும், மூத்த நிர்வாகிகளை எதிர்த்தும், மாவட்ட செயலாளர் வினோத் வேட்பாளரானார். கோஷ்டிபூசல் காரணமாக அறிமுக கூட்டமே கைகலப்பில் முடிந்தது. ஒருவழியாக சில நிர்வாகிகளை சமாதானம் செய்த வினோத், தொண்டர்கள் படைசூழ குன்னூரில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

குன்னூர் பெட்ஃபோர்ட் பகுதியில் துவங்கி,பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக வந்தனர். ஒரு வண்டி முழுக்க பட்டாசுகளை ஏற்றிவந்து வழிநெடுகிலும் வெடித்தனர். மேலும் பட்டப்பகலிலேயே இடைவிடாது வானவேடிக்கைகளையும் வெடித்தனர். இதனால் நகர் முழுவதும் புகை சூழ்ந்து தொண்டர்கள் முதல் பாதுகாப்பில் இருந்த போலீஸார் வரை திணறினர்.

admk

வேட்புமனு தாக்கல் செய்ய சார் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக நிர்வாகிகள் வந்ததால், அவர்களை திருப்பி அனுப்பினர்.மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என அதிகாரிகள் அதிமுக மீது அபராதம் விதித்தனர்.

Also Read: அமைச்சர்களின் ஆதிக்கம்... வேட்பாளர் பட்டியல் குளறுபடி... கொங்கு மண்டலத்தில் சரியும் அதிமுக?

இது குறித்து பேசிய பெண் அதிகாரி ஒருவர், "கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

admk

வேட்புமனு தாக்கலின்போது அ.தி.மு.க வேட்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத காரணத்தால் ரூ.5,000 அபராதம் விதித்து வசூலித்தோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/election/fine-for-admk-for-not-following-the-corona-rules-during-nomination

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக