Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

`இரண்டு நாள்கள்... 8 மாவட்டங்களில் கனமழை!’ - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கன்னியாகுமரி கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணிநேரத்துக்குக் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தென்காசி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் நேற்று மட்டும் அதிகபட்சமாக 138 மி.மீ. அளவுக்கு மழைப் பதிவாகியுள்ளது.

Also Read: `செம்பரம்பாக்கம் ஏரியைத் தற்போது திறந்துவிட வாய்ப்பில்லை!’ - பொதுப்பணித்துறை #LiveUpdates

அடுத்த இரண்டு நாள்களுக்கு இந்த எட்டு மாவட்டங்களில் மழை அதிதீவிரமாக இருக்கும், அடுத்தடுத்த நாள்களில் மழை குறைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வறண்ட வானிலை நிலவும் என்றும் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாகத் தூத்துக்குடியில் 17 செ.மீ, மழையும், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அடுத்துவரும் இரண்டு நாள்களுக்குத் தென் தமிழகப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை - மழை

அடுத்த 48 மணி நேரத்துக்குத் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக்கூடும். குமரிக் கடல் பகுதி, கேரள கடல் பகுதி, மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் 45-55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு தினங்களுக்குக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம்" என்று சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலsசந்திரன் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/heavy-rain-warning-for-eight-districts-in-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக